21 August 2021

The Peculiar Facts in Tamil

 

வியக்க வைக்கும்

சில சுவாரஸ்யமான தகவல்கள்

 

மரங்களைப் பற்றி....




Ø  ஆரஞ்சு பழ மரங்களின் விளைச்சல் நெடுங்காலம் இருக்கும், அதாவது ஓரு மரம் தொடர்ந்து 400 ஆண்டுகள் அது விளைச்சல் தரும்.


Ø  உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.


Ø  கிலாமிடோமொனாஸ் (CHLAMYDOMONAS TREE) என்ற ஒரு செல் தாவரம் நகரும் தன்மை உடையது.


Ø  4120 ஆண்டுகள் பழைமையான மூன்யூச் மரம் தைவான் நாட்டில் இருக்கிறது.


Ø  ஊசி இலை மரம் ஓன்று மட்டுமே இலைகளை உதிர்க்காத மரம்.



பறவைகளைப் பற்றி..





Ø  தேன்சிட்டு பறவையால் அனைத்து பக்கங்களிலும் பறக்க முடியும் அதாவது முன்னால் பின்னால் பறக்க முடியும்.


Ø  நடக்கத் தெரியாத பறவைகள் தேன்சிட்டு, மரங்கொத்தி.


Ø  கருப்பு நிறத்தில் முட்டையிடும் காட்டு வாத்து.


Ø  குயில் குளிர் காலத்தில் கூவுவதில்லை.


Ø  ஈரிதழ்சிட்டு என்ற உயிரினம்தான் பெண்ணாகவும் ஆணாகவும் உருமாறி வாழும். ஓரு வருடம் பெண் மறு வருடம் ஆண்


Ø  ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சுவாரின் என்ற பறவை தன் கூட்டுக்குள் குளிக்காமல் நுழையாது.


விலங்குகள் பற்றி...





Ø  ஓரு சிங்கத்தின் ஆயுட்காலம் பதினைந்து ஆண்டுகள்தான். இவைகளே காட்டின் அரசன் என்ற அழைக்கப்படுகிறது.


Ø  சிங்கம் ஓன்று கர்ஜித்தால் அதன் வயிறு நிரம்பியுள்ளது என்று பொருள்.


Ø  சிங்கத்தின் இருதயம் மிகச் சிறியது.



Ø  யானையின் உயரத்தைக் கண்டுபிடிக்கும் முறை என்னவென்றால் யானையின் கால் தடத்தின் நீளத்தை 6 – ஆல் பெருக்கினால் வரும் விடைதான் அதன் உயரம்





Ø  90 லிட்டர் தண்ணீரை ஓரே சமயத்தில் குடிக்கும் ஓட்டகம். ஆனால் ஓட்டகத்திற்கு நீந்தத் தெரியாது.


Ø  ஓட்டகம் மட்டுமே தனது நாக்கால் தன் காதைத் தொடும் ஓரே விலங்கு


Ø  ஓட்டகப் பால் நம்மால் தயிராக மாற்ற முடியாது


Ø  பச்சோந்தி உடலின் நீளத்தை விட 2 மடங்கு அதிகமாக இருக்கும் அதனுடைய நாக்கு.


Ø  நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.


Ø  நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயத்தின் அளவு சிறிய கார் அளவிற்கு இருக்கும்.


Ø  ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.


Ø  சுறாமீனுக்கு எந்த நோயுமே வராது.


Ø  சுறாமீன் நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும்.


Ø  கருங்காரு எலி தண்ணீர் இல்லாமல் நீண்ட நாட்கள் வாழும்


Ø  இடது கை பழக்கம் கொண்டவைதான் அனைத்து துருவக் கரடிகளும்


Ø  கரடியால் பின்புறமாக மரம் ஏற முடியும்


Ø  ஆக்டோபஸ்க்கு 3 இதயம் இருக்கும். நீல நிறத்தில் இருக்கும் அதனுடைய ரத்தம் இருக்கும்.


Ø  குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.


Ø  தலை வெட்டி எறிந்தாலும் கரப்பான் பூச்சி 9 நாட்கள் தலை இன்றி உயிர் வாழும். பசியால் மட்டுமே அது 9 நாளின் முடிவில் உயிர்விடும்.


Ø  தன் பின்னால் என்ன இருக்கிறது என்பதை தன் தலையைத் திருப்பாலே கண்டுப்பிடிக்கும் உயிரனம் கிளி மற்றும் முயல்


Ø  17 ஆண்டுகள் உறங்குமாம் சீல் வண்டுகள்


Ø  நின்றும் கொண்டே தூங்கும் விலங்குகள் – யானை மற்றும் குதிரை


Ø  ஓன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும் விலங்கு நீர் நாய் 

   

Ø  ஓரு கண்ணைத் திறந்துக் கொண்டே தூங்கும் டால்பின்


Ø  தூங்காத உயிரனம் புழுக்கள்


விநோத மனிதர்கள் பற்றி...


Ø  ஜூலியஸ் சீசர் தன் தாயின் வயிற்றைக் கிழித்து வெளியே எடுக்கப்பட்ட முதல் குழந்தை ஆவார். அதாவது சுகப்பிரசவம் அல்லாமல். அதனால்தான் அவரது பெயரே அந்த மருத்துவ முறைக்கான பெயராக வைக்கப்பட்டுள்ளது – சிசேரியன்


Ø  கி.மு. 200-களில் குன்-ஷி-ஹூவாங் என்ற மன்னரின் ஆட்சியில் கட்டப்பட்டதுதான் சீனப் பெருஞ்சுவர்.



Ø  முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டதுதான் லங்கா வீரன் சுத்ரா என்ற மதநூல்.


Ø  1368 கண்டுப்பிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் திரு.எடிசன்


Ø  தாமஸ் ஆல்வா எடிசன் 3 மாதங்கள் மட்டுமே பள்ளிக்குச் சென்றார்.


Ø  ஓரு கையால் படம் வரைந்துக் கொண்டே மறு கையால் எழுதும் திறமைக் கொண்டவர் லியான்னடோ டாவின்சி


Ø  உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்தை தனது இடது கையால் வரைந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது


Ø  32 ஆஸ்கார் விருதைப் பெற்றவர் என்ற பெருமையை உடையவர் வால்டிஸ்னி.


Ø  சுமார் 21400 மணி நேரம் தந்தை பெரியார் பொதுக் கூட்டங்களில் பேசியிள்ளார்.


Ø  மொத்தம் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் ஓலிப்பரப்பலாம் தந்தை பெரியாரின் சொற்பொழிவை ஓலி நாடாவில் பதிவு செய்தால்.


Ø  புரூஸ்லீ முதலில் தத்துவம் பயின்று ஆன்மீகவாதியானார். பிறகுதான் கராத்தே வீரர் ஆனார்.


Ø  33 ஆண்டுகளைக் கொண்டது ஓரு தலைமுறை


Ø  310 பேர்தான் 1610 ஆம் ஆண்டின் அமெரிக்காவின் மக்கள் தொகை


Ø  நுரையீரல் புற்று நோயால் தாக்கப்பட்டு இறந்தார், மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர்


மனிதனைப் பற்றி...





Ø  சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் ஓரு மனித உடலில் இருக்கிறது.


Ø  மனிதன் மட்டுமே தன்னுடைய முதுகை தரையில் கிடத்தி உறங்க முடிந்த உயிரினம்.


Ø  ஓரு மனிதனின் உடலில் வாழும் நுண்கிருமிகளின் எண்ணிக்கை சுமார் 17,000 ஆகும்.


Ø  ஓரு மனிதன் அவன் தாயின் வயிற்றில் உருவாகும் நாளே சீனாவில் அவனது பிறந்தநாளாகக் கணக்கிடப்பட்டு கொண்டாடப்படுகிறது.


Ø  குழந்தைகள் பிறந்து 6 முதல் 8 வாரங்கள் வரை அவர்களின் கண்ணில் கண்ணீர் அழுதால் வராது.


Ø  சராசரியாக 400 கேள்விகள் கேட்கும் திறமைக் கொண்டவர்கள் 4 வயது குழந்தைகள்.


Ø  இதயம்தான் தாயின் கருவறையில் முதலில் உருவாகும் உறுப்பு


Ø  இதயம்தான் முதலில் செயலிழக்கும் உருப்பு ஓரு மனிதன் இறக்கும் பொழுது.


Ø  நமது கண்கள் 6 மணி நேரம் பார்க்கும் தன்மை உடையது நாம் இறந்த பிறகும்.


பொது தகவல்கள் சில


Ø  30% சதவீதம் எரிபொருள் மட்டுமே மோட்டார் வாகனம் ஓட பயன்படுத்தப்படுகிறது. மீதி 70% நச்சுத் தன்மைக் கொண்ட கார்பன் மோனோ ஆக்சைடாக வெளியேற்றப்படுகிறது


Ø  470 கோடி ஆண்டுகள் (2010 ஆண்டு வரை) எனக் கணக்கிடப்பட்டுள்ளது சூரியனின் வயது. மிகப் பழைய பாறைகளைக் கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.

 

ஆரோக்கியமாய் உண்ணுங்கள்

சந்தோஷமாய் வாழுங்கள்...


மரம் வளர்போம்

காடு உருவாக்குவோம்

மழைப் பெறுவோம்

பூமியைப் போற்றுவோம்

 


Featured Post

Rohini nakshatra

  ROHINI NAKSHATRAM Fourth Star ranges from degrees Rishabham - Taurus 10°00' to Taurus 23°20'. It is a group of 12 stars. MEANI...