19 April 2025

பரணி நட்சத்திரம்

பரணி நட்சத்திரம்

நட்சத்திர வரிசையில் பரணி இரண்டாவது ஆகும். இது 3 நட்சத்திரங்களை கொண்டு முக்கோண வடிவில் காட்சி அளிக்கிறது. இந்த நட்சத்திரத்தின் 4 பாதங்களும் மேஷம் என்ற ராசியில் வருகிறது. 



பரணி நட்சத்திரம் பெயர் காரணம்

பரணி நட்சத்திரம் என்பது எதையும் ஏற்று கொள்வதை குறிக்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கலை ஆர்வம் மிக்கவர்கள். அழகான எதையும் ரசிப்பவர்கள். பொதுவாக இவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள்.

பரணி நட்சத்திரம் – சில குறிப்புக்கள்

பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் ஆவார். இது பெண் நட்சத்திரம். இதன் வடிவம் பெண்ணின் ரகசிய உறுப்பு - யோனி போன்று இருக்கும். இவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் யமன். உக்கிரமாக இருப்பதே இதன் சக்தியாகும்.

இவர்கள் மனுஷ கணத்தைச் சேர்ந்தவர்கள். பொதுவாக இவர்கள் தாமஸம் மற்றும் ராஜஸம் இரண்டு குணங்களின் கலவையானவர்கள். அதாவது தாமஸம் என்பது சற்று சோம்பேறித்தனம். ராஜஸம் என்பது சற்று வேகம். இந்த நட்சத்திரம் நமது உடலில், பாதத்தை ஆட்சி செய்கிறது. இதில் பிறந்தவர்கள் பித்த உடம்பு கொண்டவர்கள்.

பரணியில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட

எழுத்து

எண் 9

கல் வைரம்  

நிறம் அடர் சிவப்பு

திசை தென்கிழக்கு.

இதனுடைய

மிருகம் ஆண் யானை.

பட்சி காக்கை

பகை நட்சத்திரம் கேட்டை.

வேதை நட்சத்திரம் அனுஷம்

பஞ்ச பூதம் பூமி   

 பரணி நட்சத்திரம், செவ்வாய் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசியில் வருகிறது. 4 பாதங்களும் மேஷம் ராசியில் அடங்கும்.

ஓவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஓரு மரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதற்கான மரம் நெல்லி மரம் ஆகும். இந்த மரத்தை, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பல உண்டு. அந்த மரம் எவ்வாறு வளர்கிறதோ அவ்வாறே இவர்களுடைய வளர்ச்சியும் பல மடங்கு பெருகும்.

பொதுவான குணங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள். பேச்சாற்றல் மூலம் மற்றவர்களை எளிதில் கவர்ந்துவிடுவார்கள். நல்ல செல்வ வளத்துடன் வாழ்பவர்கள் தம் பெற்றோரை உயிராகக் கருதுபவர்கள். பெற்றோர்கள் மீது அதீத அன்பும், மரியாதையும் கொண்டவர்கள்.

திறமை மிக்கவர்கள். எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அந்தத் துறையில் சிறந்து விளங்குவார்கள். அந்தத் துறையைப் பற்றிய அதீத அறிவாற்றல் இருக்கும். புகழ் இவர்களைத் தேடி வரும். இவர்களுடைய கண்கள் மிகவும் ஈர்ப்புடனும், அழகுடனும் காணப்படும்.

இவர்களுடைய பேச்சு மிகவும் தெளிவோடு இருக்கும். இவர்கள் பெரும்பாலும் நிலத்தில் முதலீடு செய்வார்கள். இவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். நல்ல ஆரோக்கியமான வாழ்வை வாழ்பவர்கள். தாரள மனம் கொண்டவர்கள். மற்றவர்களின் மோசமான வார்த்தைகளுக்குச் செவி சாய்க்கமாட்டார்கள்.

இவர்கள் கடின உழைபாபாளிகள். வாழ்க்கையை அனுபவித்து ஆனந்தமாய் வாழ்பவர்கள். தங்களுடைய லட்சியத்தை அடைய தன்னைச் சேர்ந்தவர்களின் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்ப்பார்கள் நேர் வழியில் சென்று வெல்வார்கள். குறுக்கு வழிகள் எப்போதும் கிடையாது, அதை வெறுப்பவர்கள்.

தன்னுடைய கருத்தை மிகத் தெளிவாகவும், தைரியமாகவும் வெளிப்படுத்துவார்கள். நேர்மை மற்றும் சுயமரியாதை இவர்களுக்கு உயிர் போன்றது. தங்கள் வேலையைத் தாங்களே சுயமாகச் செய்வார்கள் பிறரின் உதவியைக் கேட்கமாட்டர்கள். தண்ணீரில் விளையாடும் விளையாட்டுக்கள் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

மிக முக்கியமான பண்புகள்

திறமைசாலிகள்

எந்த வேலையையும் செய்யும் ஆற்றல் உடையவர்கள்

நேர்மை மிக்கவர்கள்

பரிசுத்தமான இதயம் கொண்டவர்கள்

தொழில்

நிர்வாக அதிகாரிகள்

குழந்தைகள் நல மருத்துவர்கள்

நுண்கலை வல்லுனர்கள்

மருத்துவர்கள்

கலை துறை

உணவுத் துறை

நீதிபதி

சட்ட ஆலோசகர்

விளையாட்டு

பரணி நட்சத்திர கோயில்

அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில்

மூலவர்

ஸ்ரீ அக்னீஸ்வரர்

அம்மன்

ஸ்ரீ சுந்தர நாயகி அம்மன்

இடம்

நல்லாடை, பொறையார், மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

பரணி பெண்களின் பொதுவான குணங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மிகவும் துணிச்சலானவர்கள். பெற்றோர்கள் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் கொண்டவர்கள். பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள். தன் வார்த்தையாலே பிறரை ஈர்த்து தன் வசம் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவர்கள்.

சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள், அதே சமயம் சிறிது குழந்தைத்தனமும் இருக்கும். சற்று நாகரீகமானவர்கள் ஆனால், தன் மனம் கூறியபடி வாழ்க்கையை நடத்துவார்கள். பிறருடைய உதவியை நாடாமல், தன்னுடைய வேலைகளைத் தானே செய்வார்கள். இவர்களைப் பற்றிய கவலைப்பட தேவையில்லை.

இவர்கள் மற்றவர்களின் ஆலோதனைக்கு பெரிய மதிப்பு அளிக்கமாட்டார்கள். இவர்கள் வாய்ப்பிற்கு காத்திருக்காமல், தானே  வலிய சென்று அந்த வாய்ப்பைப் பெறுவார்கள். நல்ல தொழிலதிபராகத் திகழக்கூடியவர்கள். சுற்றுலா துறையிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. விளையாட்டுக்களிலும் வெற்றி பெறுவார்கள்.

இவர்களுக்கு அன்பான, அக்கறையான கணவர் அமைவார். நல்ல திருமண வாழ்க்கை அமையும். இந்தத் திருமண வாழ்வில் பெண்களின் கையே ஓங்கியிருக்கும். இவர்களுக்குத் தன் கணவர் மீது முழு நம்பிக்கை இருக்கும்.

இவர்கள் ஆரோக்கியமானவர்கள். எந்த நோயும் இவர்களை பெரிதாகத் தாக்குவதில்லை. இவர்களுக்குச் சிறிய அளவில் கர்பப்பை நோய் வரலாம். அதுவும் சீக்கிரமே குணமாகும். 

வேலை மற்றும் தொழில்

தொழிலதிபர்

விற்பனையாளர்

சுற்றுலா துறை

விளையாட்டு துறை

பொருத்தம்

தனது கணவன் மீது அதிக அன்பு இருக்கும்.

தனது கணவரின் உடன்பிறப்புக்களால் சலசலப்பு வரலாம்.

பரணி ஆண்களின் பொதுவான குணங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள். அடுத்தவரை மனம் நோக செய்யாதவர்கள். இவர்களிடம் பொய் கூறக் கூடாது, அது இவர்களுக்குப் பிடிக்காது. யாராவது செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால், உடனே முழு மனதுடன் மன்னிப்பார்கள்.

எந்த வேலைகளிலும் சிறந்தவர்கள், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். இவர்கள் விளையாட்டு, இசை, சொந்த தொழில் இவற்றில் சிறந்து விளங்குவார்கள். இவர்கள், தன்னுடைய வீட்டின் கிழக்கு பகுதியைப் பணிபுரியும் இடமாக அமைத்துக் கொண்டால் வெற்றி எளிதில் கிடைக்கும்.   

இவர்கள் தன்னுடைய குடும்பத்தை மிகவும் நேசிப்பவர்கள். தன் குடும்பத்திற்கு மிகவும் முக்கியத்துவம் இருக்கும். சிலருக்கு  தந்தையின் அன்பு சிறிது கிடைக்கும். நண்பர்கள், தாய்மாமன் போன்றவர்கள் இவர்களுக்கு உதவுவார்கள்.

இவர்கள் 27 முதல்  32 வயதிற்குள்ளாகத் திருமணம் செய்வது நலம். இவருக்கு ஆண் குழந்தைகள் உண்டு. இவர்கள் பொதுவாக நல்ல ஆரோக்கியமானவர்கள். வயது முதிர்ந்தபின் சர்க்கரை நோய், காய்ச்சல், பல் நோய் வரலாம். சிறிய அளவில்தான் வரும்.

தொழில்

தொழிலதிபர்

விற்பனையாளர்

சுற்றுலா துறை

விளையாட்டு துறை

பொருத்தம்

தனது மனைவி மீது அதிக அன்பு இருக்கும்

தன் நண்பர்கள், தாய்மாமன் உதவுவார்கள்.

தந்தை உதவி கிடைக்க வாய்ப்பு குறைவு.

பரணி நட்சத்திர பாதங்கள்

முதல் பாதம் – சூரியன் – மேஷம்

தலைமை பண்பு உள்ளவர்கள்.

சுயமாக எதையும் செய்பவர்கள்

கலை ஆர்வம் மிகுந்து இருக்கும்

எதிரியை எளிதில் சம்பாதித்து விடுவார்கள்

எளிதில் தூண்டப்படக் கூடியவர்கள்

சட்டத்தை மதிப்பவர்கள்

சில சமயம் மற்றவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார்கள்

இரண்டாம் பாதம் – புதன் – மேஷம்

லட்சித்தை அடைவதில் குறியாக இருப்பார்கள்

புத்திசாலி

மற்றவர்களின் மதிப்பைப் பெற்றவர்கள்

எதையும் அடைக்கூடிய ஆற்றல் உண்டு

கடுமையான உழைப்பாளிகள்

கடுமையான சூழ்நிலையிலும் தெளிவான முடிவெடுப்பார்கள்.

தன்னலமற்றவர்கள்

சில நேரம் சோம்போறியாகவும் இருப்பார்கள்

மூன்றாம் பாதம் – சுக்கிரன் – மேஷம்

நற்புத்தி கூறி இரண்டு வேறான எண்ணம் கொண்டவர்களை இணைக்கும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு.

மகிழ்ச்சியாக வாழ்பவர்கள்

எளிதில் தூண்டப்படக் கூடியவர்கள்

நல்ல திடமாக இருப்பார்கள்

கோபம் வரும்

நான்காம் பாதம் – செவ்வாய் - மேஷம்

நிறைய சக்தி இருக்கும்

வேலை செய்து சோர்ந்து போகாதவர்கள்

இவர்களுடைய வேலை இவர்களுக்குப் புகழைத் தரும்.

திடமான மனம் கொண்டவர்கள்

தவறான நட்பு அமைய வாய்ப்பு உண்டு.

 

முந்தைய நட்சத்திரம் >> அஸ்வினிநட்சத்திரம்

அடுத்த நட்சத்திரம் >> கார்த்திகை நட்சத்திரம்

 

உங்கள் பிறந்த நட்சத்திரம் பற்றி அறிய, உங்களது பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை எங்களுக்கு அனுப்புங்கள்.

 

இணைப்பு - Contact us 


Featured Post

Rohini nakshatra

  ROHINI NAKSHATRAM Fourth Star ranges from degrees Rishabham - Taurus 10°00' to Taurus 23°20'. It is a group of 12 stars. MEANI...