25 April 2025

கார்த்திகை நட்சத்திரம்

கிருத்திகை

நட்சத்திரம்

நட்சத்திர வரிசையில் கிருத்திகை நட்சத்திரம் மூன்றாவதாக உள்ளது. இதன் பாதங்களில் முதலாவது மட்டும் மேஷம் ராசியில் உள்ளது, மற்ற மூன்று பாதங்களும் ரிஷபம் ராசியில் உள்ளது. இவ்வாறு இரண்டு ராசிகளில் ஓரு நட்சத்திரம் வருமானால் அதை உடைந்த நட்சத்திரம் என்று கூறப்படுகிறது. இது 6 நட்சத்திரங்களின் கூட்டமாக இருக்கிறது.


கிருத்திகை நட்சத்திரம் பெயர் காரணம்

    இதை அக்னி நட்சத்திரம் எனவும் கூறலாம். இது தீயவைகளை எரித்து சாம்பலாக்கும் சக்தி கொண்டது. இது எதையும் வளர்க்கும் சக்தி கொண்டது.

கிருத்திகை நட்சத்திரம் – சில குறிப்புக்கள்

கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். இது தீக்கதிர், கூர்மையான கத்தி அல்லது அரிவாள் போன்ற தோற்றம் கொண்டது. இதன் தெய்வம் அக்னி பகவான். தூய்மைப்படுத்துதல் இதனுடைய சக்தியாகும். இது உக்கிரமான குணம் கொண்டது. இது ஓரு பெண் நட்சத்திரமாகும்.

இவர்கள் ராக்ஷஸ கணத்தைச் சேர்ந்தவர்கள். பொதுவாக இவர்கள் ராஜஸம் குணம் கொண்டவர்கள். அதாவது சற்று வேகமான போக்கு கொண்டவர்கள். இந்த நட்சத்திரம் நமது உடலில், தலை மற்றும் புருவங்களை ஆட்சி செய்கிறது. இதில் பிறந்தவர்கள் உடம்லமைப்பு கபம் ஆகும்.

கிருத்திகையில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட

எழுத்து ஆ இ உ ஏ

எண் 1 & 3

கல் மாணிக்கம்  

நிறம் வெள்ளை

திசை கிழக்கு.

இதனுடைய

மிருகம் பெண் ஆடு

பட்சி மயில்

பகை நட்சத்திரம் அனுஷம்.

வேதை நட்சத்திரம் விசாகம்

பஞ்ச பூதம் பூமி       

கிருத்தகை நட்சத்திரத்தின் முதல் பாதம் செவ்வாய் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசியிலும், மற்ற மூன்று பாதங்களும் சுக்கிரனை அதிபதியாகக் ரிஷபம் ராசியில் அடங்கும்.

ஓவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஓரு மரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதற்கான மரம் அத்தி மரம் ஆகும். இந்த மரத்தை, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பல உண்டு. அந்த மரம் எவ்வாறு வளர்கிறதோ அவ்வாறே இவர்களுடைய வளர்ச்சியும் பல மடங்கு பெருகும்.

பொதுவான குணங்கள்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவுரை வழங்குவார்கள். நேர்வறை எண்ணம் கொண்டவர்கள். நல்ல சுறுசுறுப்பானவர்கள். செயலில் வேகம் அதிகம் இருக்கும். எதையும் பகுத்தறியும் திறமை கொண்டவர்கள். தன் வேலைகளை தானே செய்வார்கள். பொய் பேசமாட்டார்கள்.

மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டவர்கள். ஆனால் மனதில் உள்ள அன்பையும், அக்கறையையும் வெளியே காட்டமாட்டார்கள். ஓழுக்கமானவர்கள், எதை நேர்த்தியாக செய்து முடிக்கும் திறமை உள்ளவர்கள். இவர்களுக்கு ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். பிரார்த்தனை மற்றும் தியானத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள். இவர்கள் ஆன்மீக வாழக்கையைத் தேர்ந்தெடுத்து வாழ நினைத்துவிட்டால், யாராலும் தடுக்க முடியாது.

கடுமையான உழைப்பாளிகள், அனைத்து வேலைகளையும் ஓரு ஓழுங்கு முறையில் சீராகச் செய்து முடிப்பார்கள். நேர்மையான இவர்களால் தவறான பாதையில் செல்வதையோ, தவறாக நடப்பவர்களையோ ஏற்க முடியாது. இவர்கள் நேர் வழியிலேயே செல்வம் சேர்ப்பார்கள். ஓருபோதும் குறுக்கு வழிகளை ஏற்கமாட்டார்கள்.

இவர்கள் சிறந்த ஆசிரியர்களாக திகழக்கூடியவர்கள். இசையிலும் நிறைய ஆர்வம் உண்டு. தலைமைப் பண்பு என்பது இவர்களை பிறவி குணம். நல்ல தலைவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு கழுத்து வலி, தொண்டை எரிச்சல், தலைவலி மற்றும் காய்ச்சல் போன்றவற்றால் சில தொல்லைகள் வரலாம். மருத்துவம் சரியாக எடுத்தால் விரைவில் குணமாகும். நாள்பட்ட வியாதிகள் இவர்களுக்கு ஏற்படாது.

மிக முக்கியமான பண்புகள்

கிருத்திகை முதல் பாதம் – மேஷம் ராசியில் பிறந்தவர்கள்

எந்த வேலையையும் வேகமாக செய்யும் ஆற்றல் உடையவர்கள்

திடமான மனம் கொண்டவர்கள்

கோபம் அதிகம் வரும்

கிருத்திகை 2 - 3 - 4 பாதம் – ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள்

கலைத் திறமை இருக்கும்.

நுண்கலைகளில் அதிக ஆர்வம் இருக்கும்

தன்னை அழகுப்படுத்திக் கொள்வதில் ஆசை இருக்கும்

மிடுக்கான உடை உடுத்துவார்கள்.

தொழில்

ஆன்மீக விரிவுரையாளர்கள்

ஆலோசகர்.

இசையமைப்பாளர்கள்

நடனத் துறை

பாடல் கலைஞர்கள்

ஆடை வடிவமைப்பாளர்கள்

ராணுவம்

கட்டிடக்கலை

தொழிலதிபர்

நூல் தயாரிப்பாளர்கள்

கைவினைப் பொருள்

மருந்து கடைகள்

கிருத்திகை நட்சத்திர கோயில்

கஞ்சாநகரம் அருள்மிகு ஸ்ரீ கார்த்த சுந்தரேஸ்வரர் கோயில்

மூலவர்

ஸ்ரீ கார்த்த சுந்தரேஸ்வரர்

அம்மன்

ஸ்ரீ துங்க பாலஸ்தானாம்பிகைஅம்மன்

இடம்

கஞ்சாநகரம், மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

கிருத்திகை பெண்களின் பொதுவான குணங்கள்

கிருத்திகையில் பிறந்த பெண்கள் மிகவும் மெல்லிய உணர்வு கொண்டவர்கள். இவர்கள் மிகவும் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள். ஆனால் ஓருபோதும் இவர்களின் உணர்ச்சி வசப்படும் குணத்தை காரணம் காட்டி மிரட்ட முடியாது. இவர்கள் திடமான மனம் கொண்டவர்கள். தங்கள் கருத்தில் உறுதியாக இருப்பார்கள்.   

ஆசிரியர், நிர்வாக அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் பொறியாள்கள் போன்ற துறைகளில் வேலையில் இருப்பார்கள். இவர்களுக்கு வருமானம் விவசாயம் மற்றும் கட்டுமான பணிகளின் மூலமே அதிகமாக வரும்.

இவர்கள் சந்தோஷமான திருமண வாழ்க்கை வாழ்வார்கள். இவர்களுக்கு நல்ல கணவர் அமைவார். பெரும்பாலும் காதல் திருமணமாக இருக்கலாம். சில பெண்கள் திருமண பந்தத்தில் ஈடுபடாமல் தனிமையில் வாழ்வதை விரும்புவார்கள். 50-வது வயது வரையில் வாழ்க்கை போராட்டமாகவே இருக்கும். பிறகு அமைதியான வாழ்வு அமையும்.

இவர்களுக்கு கவலைகள் மற்றும் பதற்றம் மிகுந்து காணப்படும். இதை கடந்து வந்துவிட்டால், இவர்களுக்கு பெரிய வியாதிகள் வர வாய்ப்பில்லை.

வேலை மற்றும் தொழில்

நிர்வாக அதிகாரி

ஆசிரியர்

மருத்துவர்

விவசாயம்

கட்டுமானத் துறை

பொருத்தம்

தனது கணவன் மீது அதிக அன்பு இருக்கும்.

நல்ல திறமையான கணவர் அமைவார்.

கிருத்திகை ஆண்களின் பொதுவான குணங்கள்

நல்ல அறிவாளிகளாக இருப்பார்கள் இந்த கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள். அரிதாகவே தன் பொருமையை இழப்பார்கள். தன்னம்பிக்கை மற்றும் மனத்திண்மை மிகுந்தவர்கள். இவர்கள் உண்மையான நண்பர்களாக திகழ்வார்கள். நல்ல ஆலோசகரும் கூட.

இவர்கள் தேவைப்பட்டால் பிறரிடம் உதவிக் கேட்க தயங்கமாட்டார்கள். திரும்ப உதவி செய்யவும் தயங்கமாட்டார்கள். இவர்கள் நேர்மையானவர்கள். இந்த நேர்மை குணமே இவர்களை சற்று கரரான தோற்றம் கொண்டவராக காட்டும்.

இவர்கள் பெரும்பாலும் யோக கலையில் வல்லுனர்களாக இருப்பார்கள். நிறைய திறமையான இசை ஆமைப்பாளர்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகவே இருக்கின்றனர்.

இவர்கள் பெரும்பாலும் தங்களது பிறந்த இடத்தைவிட்டு தொலைவிலேயே வாழ்வார்கள். அரசாங்க உதவிகள் இவர்களுக்கு எளிதாக கிடைக்கும். சொந்தமாக தொழில் தொடங்கி வெற்றி பெறுவார்கள்.

இந்த ஆண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்களுக்கு மிகவும் திறமையான மனைவி இருப்பார். காதல் திருமணமாக இருக்க வாய்ப்பு அதிகம் அல்லது நீண்ட காலம் தெரிந்த நபரை மணக்காலம்.     

இந்த ஆண்களுக்கு தவறான உணவு பழக்கங்களால் சில நோய் வரலாம். இவர்கள் பற்கள், காயங்கள் மற்றும் கண் பார்வை இவற்றில் கவனமாக இருத்தல் நலம்.

வேலை மற்றும் தொழில்

தொழிலதிபர்கள்

நூல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி

மருத்துவத்துறை

கைவினை தொழில்

கட்டுமானத் துறை

ராணுவம்

இசைத்துறை

நுண்கலைத் துறை

ஆசிரியர்கள்

பொருத்தம்

தனது மனைவி மீது அதிக அன்பு இருக்கும்.

நல்ல திறமையான மனைவி அமைவார்.

      கிருத்திகை நட்சத்திர பாதங்கள்

முதல் பாதம் – குரு – மேஷம்

மிருகங்களிடம் அன்பு உள்ளவர்கள்.

அறிவாளிகள்

செல்வம் சேரும்.

அரசனைப் போன்ற தோற்றம் இருக்கும்

மனத்திண்மை அதிகம் இருக்கும்

ஆரோக்கியம் குறைவு

இரண்டாம் பாதம் – சனி – ரிஷபம்

எளிதாக உணர்ச்சி வசப்படுவார்கள்

தன்னிலை இழந்து கோபப்படுவார்கள்.

மதத்திற்கு முக்கியத்துவம் இருக்காது.

மிகுந்த கோபம் வரும்.

மூன்றாம் பாதம் – சனி – ரிஷபம்

எதையும் எளிதில் கற்க்கும் திறமை கொண்டவர்கள்

அறிவு சார்ந்த திறமை அதிகம் இருக்கும்

சிறிது சோம்பேறித்தனம் உண்டு

முன்கோபக்காரர்கள்

கெட்ட சிந்தனை சிறிது உண்டு

நான்காம் பாதம் – குரு - ரிஷபம்

அடக்கமானவர்கள்

உற்சாகமானவர்கள்

அரிதாக தர்க்கத்தில் ஈடுபடுவார்கள்.

ஆரோக்கியம் நன்றாக இராது.

கல்வியில் தடை ஏற்பட வாய்ப்பு உண்டு.

 

முந்தைய நட்சத்திரம் >> பரணிநட்சத்திரம்

அடுத்த நட்சத்திரம் >> ரோகிணி நட்சத்திரம்

 உங்கள் பிறந்த நட்சத்திரம் பற்றி அறிய, உங்களது பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை எங்களுக்கு அனுப்புங்கள்.

 இணைப்புContact us 

 

 

 

 

 

 

 


Featured Post

Rohini nakshatra

  ROHINI NAKSHATRAM Fourth Star ranges from degrees Rishabham - Taurus 10°00' to Taurus 23°20'. It is a group of 12 stars. MEANI...