24 May 2025

ரோகிணி நட்சத்திரம்

 

ரோகிணி நட்சத்திரம்

நட்சத்திர வரிசையில் ரோகிணி நான்காவது ஆகும். இது 12 நட்சத்திரங்களைக் கொண்டது. இந்த நட்சத்திரத்தின் 4 பாதங்களும் ரிஷபம் என்ற ராசியில் வருகிறது.



ரோகிணி நட்சத்திரம் பெயர் காரணம்

ரோகிணி நட்சத்திரம், வளர்ச்சி மற்றும் முன்னேற்றது குறிக்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகானவர்கள்.  

ரோகிணி நட்சத்திரம் – சில குறிப்புக்கள்

ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் ஆவார். இது பெண் நட்சத்திரம். இதன் வடிவம் தேர் போன்று இருக்கும். இவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீ பிரம்மா – படைப்புக் கடவுள். வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் இதன் சக்தியாகும்.

இவர்கள் மனுஷ கணத்தைச் சேர்ந்தவர்கள். பொதுவாக இவர்கள் ராஜஸம் குணம் கொண்டவர்கள், அதாவது சற்று வேகமானவர்கள். இந்த நட்சத்திரம் நமது உடலில், முன் நெற்றியை ஆட்சி செய்கிறது. இதில் பிறந்தவர்கள் பித்த உடம்பு கொண்டவர்கள்.

ரோகிணியில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட

எழுத்து &  வி

எண் 2

கல் முத்து  

நிறம் வெள்ளை

திசை தென்மேற்கு.

இதனுடைய

மிருகம் ஆண் பாம்பு  

பட்சி ஆந்தை

பகை நட்சத்திரம் விசாகம்.

வேதை நட்சத்திரம் சுவாதி

பஞ்ச பூதம் பூமி   

 

ரோகிணி நட்சத்திரம், சந்திரன் கிரகத்தை அதிபதியாகக் கொண்டு ரிஷபம் ராசியில் வருகிறது. 4 பாதங்களும் ரிஷபம் ராசியில் அடங்கும்.

ஓவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஓரு மரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதற்கான மரம் நாவல் மரம் ஆகும். இந்த மரத்தை, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பல உண்டு. அந்த மரம் எவ்வாறு வளர்கிறதோ அவ்வாறே இவர்களுடைய வளர்ச்சியும் பல மடங்கு பெருகும்.

பொதுவான குணங்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகானவர்கள். ஈர்ப்பு விசை அதிகம் கொண்டவர்கள். கண்கள் அதிகமாக வசீகரமாக இருக்கும். அழகான சிரிப்பு இருக்கும். இயற்கையை அதிகம் ரசிப்பவர்கள். இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொள்வார்கள்.

கூட்டமாக இருக்கும் இடத்தில் இவர்கள் நடுவிலே இருப்பர். இவர்கள் தங்களுடைய திறமை மற்றும் அழகால் பிறரை ஈர்ப்பவர்கள். இவர்கள் நேர்மையானவர்கள் மற்றும் நம்பிக்கையானவர்கள் எனவே இவர்களா மற்றவர்கள் முழுமையாக நம்புவார்கள்.இவர்கள் தன் குடும்பத்தை அதிகம் நேசிப்பவர்கள். இவர்களுக்குக் குடும்பமே முக்கியம்.

ஆடம்பரத்தை விரும்புவார்கள். தங்களுடைய ஆடம்பரத் தேவைக்குத் தயங்காமல் பணம் செலவு செய்யவார்கள். இவர்கள் திடமானவர்கள். சற்று முன்கோபமும் வரும். சில சமயம் பொறாமை குணமும் எட்டிப் பார்க்கும்.

இவர்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வுக் கொண்டவர்கள் எனவே எந்த நோயும் அதிகம் பாதிக்காது. 38 வயது வரை வாழ்வில் போராட்டம் இருக்கும். பிறகு போராட்டம் நீங்கி வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்.

இவர்கள் எதிர்காலத்தைப் பற்றிய பயம் அற்றவர்கள். வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் இருக்காது. ஏற்ற இறக்கம் கொண்டது இவர்களுடைய வாழ்க்கை.

எந்தச் செயலையும் மிகவும் பொறுமை மற்றும் நிதானமாகச் செய்து வெற்றிப் பெறுவார்கள்.        

மிக முக்கியமான பண்புகள்

அழகானவர்கள்

வசீகரத் தோற்றம் கொண்டவர்கள்

சம நிலை உள்ளவர்கள்

புகழ் மிக்கவர்கள்

செல்வந்தர்கள்

நல்ல ஆரோக்கியம் பெற்றவர்கள்

தொழில்

நிர்வாக அதிகாரிகள்

அரசியல்வாதிகள்

இசையமைப்பாளர்கள்

ஓவியர்கள்

நடிகர்கள்

நடன கலைஞர்கள்

விவசாயம்

உணவக உரிமையாளர்கள்

ஆடை வடிவமாப்பாளர்கள்

நில விற்பனையாளர்கள்

ரோகிணி நட்சத்திர கோயில்

அருள்மிகு ஸ்ரீ பாண்டவ தூதப் பெருமாள் கோயில்

மூலவர்

ஸ்ரீ பாண்டவ தூதப் பெருமாள்

அம்மன்

ஸ்ரீ சத்ய பாமா தாயார்

ஸ்ரீ ருக்மணி தாயார்

இடம்

திருப்பாடகம், காஞ்சிபுரம், தமிழ்நாடு, இந்தியா.

ரோகிணி பெண்களின் பொதுவான குணங்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மிகவும் அழகானவர்கள். இவர்களுக்குக் கொடுக்கப்படும் எந்த வேலையையும் மிகவும் நேர்த்தியாகச் செய்து முடிப்பவர்கள். இவர்கள் அழகான, பொருத்தமான ஆடைகளை அணிய விரும்புவார்கள். நல்ல பண்பு மிக்கவர்கள். உள் நிலை மற்றும் வெளித் தோற்றத்திலும் சற்று பலவீனமானவர்கள், ஆனால் அதை வெளிக்காட்டாமல் இருப்பார்கள்.

இவர்கள் சற்று முன்கோபம் கொண்டவர்கள். பாரம்பரிய பழைய பழக்க வழக்கங்களை விரும்புவார்கள். புதியவற்றையும் பின்பற்றுவார்கள். இவர்கள் பெரும்பாலும் நிகழ் காலத்திலேயே வாழ்பவர்கள். அதனால் எதிர்காலத்தைப் பற்றிய பயமோ, கவலையோ இருக்காது.

மதப் பற்று மிகுந்து காணப்படும். வழிபாடுகளை மிகவும் சிரத்தையோடு செய்வார்கள். இவர்கள் அதிகமாக ஆடை வடிவமைத்தலையே தொழிலாகச் செய்வர்கள். இதில் இவர்களுடைய வளர்ச்சி வேகமாக இருக்கும்.

இந்தப் பெண்களுக்கு, அறிவான, அழகான கணவர் அமைவார். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிய்யாக இருக்கும், இவர்களுக்கு அன்பான, அக்கறையான குழந்தைகள் உண்டு. இவர்கள் தங்களுடைய பொறாமை குணத்தைக் கட்டுபடுத்தினால் திருமண வாழ்க்கை சிறக்கும். இல்லாவிட்டால் சற்று கடினப்படுவார்கள்.

சளி மற்றும் இருமல் இவர்களைப் பாதிக்கலாம். ஓழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் வரலாம். சற்று மார்வலி மற்றும் கால் வலி தொந்தரவும் உண்டு. பெரிய வியாதிகள் இவர்களை அணுகாது.  

வேலை மற்றும் தொழில்

ஆடை வடிவமைப்பாளர்கள்

அழகு சாதனப் பொருட்கள் விற்பனையாளர்கள்

அழகு கலை நிபுணர்கள்

நகை விற்பனையாளர்கள்

ஆடம்பர ஆடை விற்பனையாளர்கள்

போக்குவரத்து துறை

பொருத்தம்

தனது கணவன் மீது அதிக அன்பு இருக்கும்.

தனது குழந்தைகளை உயிராக நேசிப்பவர்கள்.

ரோகிணி ஆண்களின் பொதுவான குணங்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் வசீகர தோற்றம் கொண்டவர்கள். இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்பத் தங்களை மாற்றிக் கொள்வார்கள், அன்பானவர்கள். தன் குடும்பமே உலகம் என வாழுபவர்கள். நல்ல பேச்சாளர்கள், புலமையும் உண்டு. ஆன்மீகத்தில் ஈடுபாடு மிகுந்து காணப்படும்.

இயற்கையாகவே திடமான உள்ளம் கொண்டவர்கள். சற்று முன்கோபம் இருக்கும் எனவே இவர்களைக் கோபத்தில் கட்டுப்படுத்துவது கடினம். பிறருடை.ய ஆலோசனைகளை இவர்கள் ஏற்க மாட்டார்கள். தனக்கு சரியெனத் தோன்றியதை தைரியமாகச் செய்வார்கள். ஆடம்பரத்தில் நாட்டம் அதிகம். தன்னுடைய ஆடம்பரத்த தேவைக்காகப் பணத்தை செலவு செய்யத் தயங்கமாட்டார்கள்.  

பயணம் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஓன்று. தனக்கான எதையும் பிறருக்கு விட்டுக்கொடுக்கமாட்டார்கள். இவர்கள் அழகான, அறிவான மனைவி அமையப் பெற்றவர்கள். தந்தையுடைய அரவணைப்போ, பாசமோ இவர்களுக்குக் கிடைப்பது அற்பம். இவர்களுக்குத் தாய் அன்பு அதிகம் கிடைக்கும். தாய் வழி உறவினர்கள் பாசமாக இருப்பார்கள்.

இவர்களுக்கு இரத்த சம்பந்தமான நோய்கள் வரலாம். அதாவது நீரழிவு நோய். சிறுநீரகப் பிரச்சனைகளும் வரலாம். மருத்துவ ஆலோசனைப் பெற்றால் குணமாகும். பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.     

தொழில்

விவசாயம்

தொழிலதிபர்

ஆடை விற்பனையாளர்

போக்குவரத்து துறை

தோட்டக்கலை

அரசியல்

எண்ணை மற்றும் பெட்ரோல்

ரசாயனத் துறை

நீர் சம்பந்தமான தொழில்

பொருத்தம்

தனது தாய் மீது அதிக அன்பு இருக்கும்

மனைவி, குழந்தைகள் மீது அன்பு கொண்டவர்கள்

தன் தாய் வழி சொந்தங்கள் உதவுவார்கள்.

தந்தை உதவி கிடைக்க வாய்ப்பு குறைவு.

ரோகிணி நட்சத்திர பாதங்கள்

முதல் பாதம் – செவ்வாய் – ரிஷபம்

புத்திசாலிகள்.

அழகான தோற்றம் கொண்டவர்கள்

மிருகங்கள் மிகவும் பிடிக்கும்

பயணம் அதிகம் மேற்கொள்வார்கள்

அளவுக்கு மீறிய ஆசை உண்டு

சிறு உடல் உபாதை ஏற்படலாம்

இரண்டாம் பாதம் – சுக்கிரன் – ரிஷபம்

பேச்சாற்றல்

அன்பாவர்கள்

மற்றவர்களின் மதிப்பைப் பெற்றவர்கள்

தனது வாழ்க்கைத் துணையை நேசிப்பவர்கள்

திடமான எண்ணம் சற்று குறைவு

சில சமயம் குரூர புத்தியும் இருக்கும்

மூன்றாம் பாதம் – புதன் – ரிஷபம்

இசையில் ஆர்வம் அதிகம்

மாய வித்தைகளில் ஈடுபாடு உண்டு

சந்தோஷமாக வாழிபவர்கள்

குருவின் அருள் பெற்றவர்கள்

கணித வல்லுநர்கள்

நான்காம் பாதம் – சந்திரன் - ரிஷபம்

புகழ் பெற்றவர்கள்

தான் என்ற திமிர் சற்று உண்டு

மற்றவர்களுடை செல்வத்தில் ஆர்வம் இருக்கும்

 

முந்தைய நட்சத்திரம் >> கார்த்திகை நட்சத்திரம்

அடுத்த நட்சத்திரம் >> மிருகசிரீஷம் நட்சத்திரம்

 

உங்கள் பிறந்த நட்சத்திரம் பற்றி அறிய, உங்களது பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை எங்களுக்கு அனுப்புங்கள்.

 

இணைப்புContact us 

 

 

 

 

No comments:

Post a Comment

Featured Post

மிருகசிரீஷம் நட்சத்திரம்

  மிருகசிரீஷம் நட்சத்திரம் நட்சத்திர வரிசையில் மிருகசிரீஷம் ஐந்தாவது ஆகும். இது 3 நட்சத்திரங்களைக் கொண்டது. இந்த நட்சத்திரத்தின் 2 பாதங்கள...